ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் ஒவ்வொருநாளும் மேலும் தீவிரம் அடை ்து வருகிறது,இந்த இளைஞர்களின் ஏழுச்சிக்காக நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதனாக இளைஞர்களுக்கு குரல் கொடுத்து களத்தில் இறங்கி போராடி வருபவர் நடிகர் லாரன்ஸ்.
தொடர்ந்து அங்கு போராடி வரும் அனைவருக்கும் ,உணவு மட்டும் இன்றி அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு கோடி வரை செலவு செய்து மக்களின் மனதை வென்றுள்ளார்.
இந்நிலையில்,ஏற்கனவே கழுத்து வலி போற உடல் நல குறைவால் பாதிக்க பட்ட அவர் சிறிது கூட ஓய்வில்லாமல் போராடியதால் தீடீர் என கழுத்து வலி அதிகமானதாக கூற படுகிறது, இதன் காரணமாக அங்கிருந்த இளைஞர்கள் அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் சிகிச்சைக்கு பின்பு இந்த போராட்டத்தில் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என கூறி அங்கிருந்து மருத்துவமைக்கு சென்றார் லாரன்ஸ்.
