”நடிகை கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்னா வேற எதையாவது செய்யலாமே?”...வாத்தியாருக்கு வக்காலத்து வாங்கும் லதா...

“என்னய்யா இது.. ‘பல்லாண்டு வாழ்க’ படத்துல வாத்தியாரு, லதாவை தடவுனதைவிட அதிகமா தடவுறாங்க” என்று ட்விட் போட்ட கஸ்தூரிக்கு,  மிகக் கடுமையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்திருக்கிறார் முன்னாள் நடிகை லதா.

latha replies to actress kasthuri

“என்னய்யா இது.. ‘பல்லாண்டு வாழ்க’ படத்துல வாத்தியாரு, லதாவை தடவுனதைவிட அதிகமா தடவுறாங்க” என்று ட்விட் போட்ட கஸ்தூரிக்கு,  மிகக் கடுமையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்திருக்கிறார் முன்னாள் நடிகை லதா.latha replies to actress kasthuri

பட வாய்ப்புகள் மிகவும் வறண்டுபோன நிலையில் தனது முகநூல் ட்விட்டர் பக்கங்களில் சர்ச்சைகளைக் கிளப்பி தன்னை ஒரு ஹாட் டாபிக்காக வைத்துக்கொள்வதில் கஸ்தூரி சமர்த்தானவர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மந்தமான ஆட்டத்தை விமர்சித்து அவர் போட்ட ட்விட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அந்த ட்விட் குறித்து நடிகை லதா என்ன சொகிறார் என்று தொடர்புகொண்டபோது ஆத்திரத்தின் உச்சியில் இருந்தார் லதா. “நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?latha replies to actress kasthuri

இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். 

கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே..? அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்..?

அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா..? ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பேசலாமா..? கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி..” என்று கோபத்தோடு சொன்னார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios