’பேட்ட’ படத்தின் 50 வது நாள் வெற்றிவிழாவில் ஒரு குழந்தைக்கு பாகிஸ்தான் பிடியில் சிக்கி இன்று விடுதலையாக உள்ள இந்திய ராணுவ விமானி அபிநந்தனின் பெயரைச் சூட்டி நிகழ்ச்சியில்  கலந்துகொண்டவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த்.பேட்ட படத்தின் 50 வது நாளை சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள அரங்குகளில் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சிக்கு இணையாகக் கொண்டாடி வருகின்றனர். அஜீத்தின் ’விஸ்வாசம்’படத்துடன் பொங்கலன்று ரிலீஸான ரஜினியின் ‘பேட்ட’ படம் நேற்று 50 வது நாளைத் தொட்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

அஜீத்தின் ‘விஸ்வாசம்’ பட வசூலை விட சற்றே குறைவான வசூலை ‘பேட்ட’ எட்டியிருந்தாலும் ரஜினியைப் பொறுத்தவரை இது ஒரு சூப்பர் ஹிட் படம் தான். அந்த உற்சாகத்தைக் கொண்டாடும்படி தமிழகம் முழுக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தக் கொண்டாட்டங்களுக்குப் பிள்ளையார் சுழியாக நேற்று சென்னையில் நடந்த ‘பேட்ட’ 50 வது நிகழ்ச்சி ஒன்றில் சூப்பர் ஸ்டாரின் மனைவி லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.  விழாவின்  முக்கிய நிகழ்வாக 3 மூன்று குழந்தைகளுக்கு இறந்த இராணு வீரர்கள் 2 பேர் பெயரையும் குழந்தைக்கு கட்டுப்பட்டில் இருக்கும், இன்று விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும்,  விமானிஅபிநந்தன் பெயரை லதா ரஜினிகாந்த் சூட்டினார். அபிநந்தன் பெயரை சூட்டியபோது விழாவில் கலந்துகொண்ட அனைவரும் நெகிழ்ச்சியோடு கரகோஷம் எழுப்பினார்கள்.