90 வயது பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த திங்கட்கிழமை சுவாச பிரச்சினையால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை  வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், அவரது உடல் நலத்தில் நேற்று ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனாலும் அவர்து உடல்நிலை கவலைக்கிடமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் இசைக்குயில் என வர்ணிக்கப்படும் லதா மங்கேஷ்கர் பல்வேறு மொழி படங்களில் 30 ஆயிரம் பாடல்களை பாடியவர். பாரத ரத்னா விருதும் பெற்றவர் ஆவார்.