latest update about super stars upcoming movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் காலா. இந்த திரைப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரிப்பது இதன் மற்றுமொரு சிறப்பு.

கபாலி திரைப்படத்திற்கு பின் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கும் திரைப்படம் என்றால், அது காலா தான். காலா திரைப்படம் வரும் ஜூன் 7 அன்று திரைக்கு வெளிவரவிருக்கிறது.

சமீபத்தில் நடந்திருக்கும் ஸ்டெர்லைட் பிரச்சனையால் காலா திரைப்படம் வெளியாகுவதில் காலா தாமதம் ஏற்படுமா? என ரசிகர்கள் மனதில் சில கேள்விகள் எழும்பியிருக்கும் தருணம் இது.

ஆனாலும் அப்படி எந்த வித மாற்றமும் செய்யப்போவதாக காலா படக்குழு இதுவரை தெரிவிக்கவில்லை. மே 29 அன்று காலா திரைப்படத்தின் தெலுங்கு பிரமோஷன் நடைபெற உள்ளது. மேலும் அன்று காலா திரைப்படத்தின் பிரீமியர் காட்சிகளுக்கு சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

காலா திரைப்படத்தினை ஃப்ரான்ஸில் ரிலீஸ் செய்யும் உரிமையை, ஐங்கரன் நிறுவனம் வாங்கியிருக்கிறது. எனவே அங்கும் கூட காலா ரிலீசுக்கான பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன.

இந்நிலையில் அரபு நாடுகளில் காலா படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்திருக்கிறது. அங்கிருக்கும் வோக்ஸ் சினிமாஸில் அட்வான்ஸ் புக்கிங் இப்போதே தொடங்கிவிட்டது. காலா திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் ரிலீசாக இருக்கிறது. காலா படத்துக்கான ஹிந்தி பிரமோ கூட இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மொத்தத்தில் காலா இப்போதே தனது வெற்றிப்பயணத்தை தொடங்கி விட்டது