Ajith : அஜித் மேல் அவ்வளவு பாசம்.. அவரை அரசியலுக்கு அழைத்த "அம்மா" - ஜெயலலிதா பற்றி மனம் திறந்த பிரபலம்!
Jayalalitha : கோலிவுட் உலகின் டாப் நடிகையாகவும், தமிழகத்தின் இரும்பு பெண்மணியாகவும் திகழ்ந்தவர் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா.
தமிழில் கடந்த 1965ம் ஆண்டு வெளியான "வெண்ணிற ஆடை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கோலிவுட் பயணத்தை தொடங்கிய நடிகை தான் ஜெயலலிதா. ஆனால் அதற்கு முன்னதாகவே 1961ம் ஆண்டு முதல் அவர் கலைத்துறையில் பயணித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் என்று பல மொழிகளில் 140-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜெயலலிதா.
செல்வி ஜெயலலிதா, கடந்த 1980ம் வெளியான "நதியைத் தேடி வந்த கடல்" என்ற திரைப்படத்தில் தான் இறுதியாக நடித்திருந்தார். அதன் பிறகு முழுநேர அரசியல் தலைவராக பயணித்த செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்டார். முதல்வராக நான்கு முறை தமிழகத்தை ஆண்ட பெருமை ஜெயலலிதாவிற்கு உண்டு.
அரசியலில் பயணித்து வந்தாலும், தனது கலை துறையோடு உள்ள ஈர்ப்பை அவர் என்றுமே குறைத்துக் கொண்டதில்லை. திரையுலகம் சம்பந்தமாக நடக்கும் விழாக்களில் தன்னால் இயன்றவரை பங்கேற்று மகிழ்ச்சி அடைந்த ஜெயலலிதா, பிரபல நடிகர் அஜித்குமார் மீது வைத்திருந்த அன்பு குறித்து பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு மனம் திறந்துள்ளார்.
அவர் அளித்த தகவலின்படி அஜித் மேல் ஜெயலலிதா அதிக பாசத்தோடு இருந்ததாகவும், தனக்கு ஒரு மகன் இருந்திருந்தால் இவரை போலத்தான் வெள்ளையாக இருந்திருப்பார் என்று பலமுறை கூறியதாகவும் பாலு கூறியிருக்கிறார். அஜித் அவர்களுடைய திருமணத்திற்கு முதல் ஆளாக சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா அவரை அரசியலுக்கும் அழைத்ததாக கூறியுள்ளார்.
தல அஜித் மேல் அதிக பாசம் கொண்ட அவர், நீங்க வந்துருங்க தம்பி, பொறுப்பை எடுத்துக்கோங்க என்று கூறியுள்ளார். ஆனால் மிகவும் அன்போடு இல்லைங்க மேடம், நான் சினிமாவில் மட்டும் பயணிக்கிறேன் என்று கூறி அதை மறுத்தார் அஜித் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.