சன் மியூசிக் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் கடந்த வாரம் திடீர் என  புற்றுநோய் காரணமாக, உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது... இவரது வித்தியாசமான கடைசி ஆசையை இவரது மனைவி நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

சன் மியூசிக் தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் கடந்த வாரம் திடீர் என புற்றுநோய் காரணமாக, உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது... இவரது வித்தியாசமான கடைசி ஆசையை இவரது மனைவி நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

தொகுப்பாளர்களுக்கும் தனி ரசிகர்களை உருவாக்கிய தொலைக்காட்சி என்ற பெருமை சன் மியூசிக் தொலைக்காட்சியையே சேரும், அதிலும் 90'ஸ் கிட்ஸ் அதிகம் கொண்டாடிய தொகுப்பாளர்களில் ஒருவர் தான் ஆனந்த கண்ணன். சிங்கப்பூர் தமிழனான இவர், சிங்கப்பூரில் ஒளிபரப்பாகி வந்த வசந்தம் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர்.

சரளமாக தமிழ் பேசுவதால் சென்னையில் ரேடியோ ஜாக்கியாக மாறும் வாய்ப்பு தேடி சென்றது. ரேடியோ ஜாக்கியாக இருந்து கொண்டே, சின்னத்திரை வாய்ப்புகளை தேடி வந்தார். அப்போது சன் ம்யூசிக்கில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக விரைவிலேயே இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகமானது. எனவே விக்ரமாதித்தன், மர்மதேசம் போன்ற சீரியல்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Click and drag to move

வெள்ளி திரையை தொடர்ந்து, வெங்கட் பிரபுவின் சரோஜா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடித்தார். வெள்ளித்திரை வாய்ப்புகளை நம்பி சின்னத்திரையை கை விட்டார். வெள்ளித்திரை படங்களும் தொடர் தோல்வியை தழுவியதால்... வேறு வழி இன்றி மீண்டும் பழைய சிங்கப்பூர் சேனலான வசந்தம் டிவியில் பணியாற்ற புறப்பட்டார். மேலும் தனியார் கலை அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழ் கலாச்சாரம் மற்றும் கிராமிய கலைகளை சிங்கப்பூர் இளைஞர்களுக்கு கற்பித்து வந்தார். 

Click and drag to move

அங்கேயே தன்னுடைய பணியை தொடர்ந்து வந்த இவருக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஆனந்த கண்ணன், கடந்த வாரம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவர் மரணம் அடைவதற்கு முன்பு தன்னுடைய வித்தியாசமான கடைசி ஆசையை மனைவி மற்றும் தாயிடம் கூடி நிறைவேற்றும்படி தெரிவித்தார். இதை இவரது மனைவி நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

Click and drag to move

அதாவது தான் இறந்த செய்தி கேட்டு வீட்டிற்கு வருபவர்கள் சிரித்தபடி தான் வர வேண்டும், என்றும், தன்னுடைய சடலத்தை மேளதாளத்தோடு தூக்கி செல்ல வேண்டும், பார்பவதற்கு சாவு வீடுபோல் இல்லாமல் கல்யாண வீடு போல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். கணவர் இழந்த துக்கத்திலும், ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை... மனதை கல்லாக்கி கொண்டு அவரது மனைவி நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.