இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் அஸ்தி.. குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு..
லதாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான ஹிருதயநாத் மங்கேஷ்கரின் மகனான ஆதிநாத்திடம் அஸ்தி கலசத்தை ஒப்படைத்தோம் என உதவி நகராட்சி ஆணையர் கிரண் திகாவ்கர் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார். அஸ்தி எங்கு கரைக்கப்படும் என்பது குறித்து குடும்பத்தினரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (6/2/2011) அவர் காலமானார். அவருக்கு வயது 92
லதா மங்கேஷ்கர் 1929 ஆம் ஆண்டு மராத்தி மற்றும் கொங்கனி இசைக்கலைஞரான தீனநாத் மங்கேஷ்கர் மற்றும் அவரது மனைவி ஷெவந்தி ஆகியோரின் மூத்த மகளாக இந்தூரில் பிறந்தார். லதா பிறந்தபோது "ஹேமா" என்று பெயர் சூட்டப்பட்டது. அவரது தந்தையின் நாடகங்களில் ஒன்றான பாவ்பந்தனில் லத்திகா என்ற பெண் கதாபாத்திரத்திற்குப் பிறகு அவரது பெற்றோர்கள் அவருக்கு லதா என்று பெயரிட்டனர் .
லதா குடும்பத்தின் மூத்த பிள்ளை. மீனா , ஆஷா , உஷா , மற்றும் ஹிருதய்நாத் ஆகியோர் அவரது உடன்பிறந்தவர்கள்; அனைவரும் திறமையான பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள். லதா தனது முதல் இசைப் பாடத்தை தந்தையிடம் இருந்து பெற்றார். ஐந்து வயதில், அவர் தனது தந்தையின் மராத்தியில் சங்கீத இசை நாடகங்களில் நடிகையாக பணியாற்றத் தொடங்கினார்.
சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள லதா மங்கேஷ்கர், இந்திய ரசிகர்களால் “கானக்க் குயில்” எனவும் போற்றப்படுகிறார். இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள் என மேலும் பல விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
தன்னுடைய நான்கு வயதிலேயெ படத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்திய திரையுலகில், மிகச்சிறந்த பின்னணிப் பாடகியாக புகழ் பெற்று விளங்கினார். அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட லதா மங்கேஷ்கருக்கு, பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினரைத் தொடர்புக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.
லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்ட்து. இன்று இந்திய இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் அஸ்தி அவரது மருமகன் ஆதிநாத் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இருந்து பாடும் ஜாம்பவானின் அஸ்தியை பெற்றுக்கொண்டார்..
லதாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான ஹிருதயநாத் மங்கேஷ்கரின் மகனான ஆதிநாத்திடம் அஸ்தி கலசத்தை ஒப்படைத்தோம் என உதவி நகராட்சி ஆணையர் கிரண் திகாவ்கர் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார். அஸ்தி எங்கு கரைக்கப்படும் என்பது குறித்து குடும்பத்தினரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லை.