விரைவில் லாஸ்லியா வெள்ளித்திரையில் ஹீரோயினாக வலம் வர உள்ளார் என்ன லாஸ்லியாவின் உற்றத்தோழியான  தர்ஷி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.   பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்யா பங்கேற்று தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றார்.  இந்நிலையில் தன்னுடைய சாதுர்யமான அணுகுமுறைகளால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாம் இடம் பிடித்தார்.  ஆடல் பாடல் என மகிழ்ச்சியாக இருந்தவர் திடீரென கவின் உடன் காதல் ஏற்பட்டு அதற்காக சாக்ஷியுடன் சண்டை என தனது பன்முகத்தன்மையை காட்டினார் லாஸ்லியா,  பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் கவினுடன் காதல் தொடர்கிறார் அவர். 

இந்நிலையில் அவரின் காதலுக்கு சமூகவலைதளத்தில் அமோக ஆதரவு இருந்து வருகிறது. விரைவில் இரு வீட்டார் சம்மதத்துடன்  திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும்  தகவல் வெளியாகி உள்ளன. விரைவில்  அதிகாரப்பூர்வமாக திருமணத்தை அறிவிக்க வேண்டும் என இவரின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.  லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது எப்போதும் தனக்கு பிடித்த அக்கா தர்ஷி அக்கா என்று கூறி வந்த்தை அனைவரும் அறிவோம், இந்நிலையில் லாஸ்லியாவின் நெருங்கிய தோழியான தர்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  லாஸ்லியா உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் ஒரு முட்டையில் இருந்து ஒரு ஸ்டார் போல ஒரு குஞ்சு வெளிவருவது போலவு போஸ்டர்  ஒன்று பதிவிட்டுள்ளார். 

இதைக் கண்ட லாஸ்லியா ரசிகர்கள் ஓ அப்படியா...  லாஸ்லியா விரைவில் நடிக்கப் போகிறாரா.?  என்று கேள்வி எழுப்ப,  ஆமாம் என உண்மையை போட்டு உடைத்தார் தர்ஷி,  லாஸ்லியா விரைவில் வெள்ளித்திரையில் வளம் வர உள்ளார்,  அவரின் நடிப்பை வெள்ளித் திரையில் காண அவரது ரசிகர்கள் ஆர்வமுடன்  காத்திருக்கின்றனர்