சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஹீரோவா நடிக்கும் படத்தில் லலிதா நகை கடை ஓனரை வில்லனாக நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

 

நடிகைகளை வைத்து விளம்பரம் எடுத்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தானே விளம்பரப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, அடுத்து அவரது பாதையை பல உரிமையாளர்கள் பற்றிக்கொண்டு தாங்களே தங்களது விளம்பரப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தனர். 

அந்த வகையில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு இணையாக அடுத்தடுத்து விளம்பரப்படங்களில் தோன்றினார் லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண் ரெட்டி. இப்போது சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில்  சினிமாவில் ஹீரோவாகி விட்டார். அவரைப்போலவே விளம்பர படங்களில் தோன்றி வரும் லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண் ரெட்டியை சரவணா ஸ்டோர்ஸ் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க வைக்கலாம் என்கிற ரீதியில் தங்களது ஆசைகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

நிஜத்தில் தொழில் போட்டியாளர்களான அவர்களுக்குள் இதெல்லாம் நடப்பதற்கு சாத்தியமே இல்லைதான். அதற்காக நெட்டிசன்களின் ஆசைகளுக்கும், கற்பனைகளுக்கும் தடைபோட முடியுமா?

இதோ அவர்களின் பதிவுகளில் சில