லட்சுமி ராமகிருஷ்ணன் மனதில் பட்ட எதையும் வெளிப்படையாக பேசி அடிக்கடி எதாவது சிறு பரபரப்பை ஏற்படுத்துவார்.
சமீபத்தில் திரைக்கு வந்த கடவுள் இருக்கான் குமாரு படத்தில் இவரை கிண்டல் செய்யும் விதமாக ஒரு சில காட்சிகள் இடம்பெற்றது.
இதை தொடர்ந்து அவர் அந்த காட்சியில் நடித்த பாலாஜி, ஜி.வியிடம் கோபமாக தன் கருத்தை சொல்ல, பாலாஜி ஒரு பேட்டியில் இதற்கு நான் பொறுப்பாக முடியாது இயக்குனர் சொல்வதை செய்தேன் என பதிலடி கொடுத்தார்.
இந்த பேட்டியை பார்த்துவிட்டு லட்சுமி ராமகிருஷ்ணன் மீண்டும் தனது டுவிட்டரில் ‘இருக்கும்போது கேவலப்படுத்துவீங்க, செத்துப்போன புகழ்வீங்க’ என்று மிரட்டும் தோரணையில் ட்விட் செய்துள்ளார்.
இதற்கு பலர் நீங்கள் நடத்திவரும் நிகழ்ச்சியில் பலரை கேவல படுத்துகிறீர்களே அது எந்த விதத்தில் நியாயம் என்றும் இந்த நிகழ்ச்சியால் பல உயிர் பிரிந்துள்ளது நினைவில் உள்ளதா என பலரும் பாலாஜிக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். என்னமா இப்படி பண்ணிட்டாங்களேம்மா...... ரசிகர்கள்.
