‘பெண் குழந்தைகளின் தாயாக ’ஆடை’படம் குறித்து உங்களிடம் சில கேள்விகள் கேட்கவேண்டியிருக்கிறது. என்னுடன் விவாதத்துக்கு வரத் தயாராக இருக்கிறீர்களா? என்று அப்படத்தின் நாயகி அமலா பாலையும், இயக்குநர் ரத்னக்குமாரையும் வம்புக்கு இழுத்திருக்கிறார் பிரபல நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.

‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். கடந்த 21ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் பெரிய அளவுக்கு வெற்றிபெறவில்லை. ஆடையின்றி நடித்த அமலாபாலின் துணிச்சலான நடிப்பையும் திரைத்துறை பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஆடை படம் குறித்த ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா? என்று அமலாபால் மற்றும் படத்தின் இயக்குநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில்,... ஆடை படக்குழுவினருக்கு வாழ்த்துகள். படம் பார்க்கும்போது அமலாபாலின் கடின உழைப்பு படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா? உங்களிடமும் படத்தின் இயக்குநரிடமும் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. இயக்குநராக நடிகராக அல்ல. ஒரு பெண்ணாகவும், தாயாகவும், சாதாரண பார்வையாளராகவும்” என்று வம்பிழுத்துள்ளார். அப்படி ஒருவேளை விவாதத்துக்கு வரலைன்னா போலீஸைக் கூப்பிடுவீங்களா மேடம்?