கடவுள் இருக்கான் குமாரு படத்தில் தனது அசத்தல் காமெடியால் அந்த படத்தையே தூக்கி நிறுத்தியவர் பாலாஜி தான். 

இந்த படத்தை பார்த்த பலரும் இதை தான் கூறுகிறார்கள், இந்நிலையில் இந்த படத்தில் நடிகை மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷணன் தொகுத்து வழங்கி வரும் ஒரு நிகழ்ச்சியை கலாய்த்து தள்ளியிருப்பார்கள்.

இதற்கு தனது லட்சுமி டுவிட்டரில் பக்கத்தில் மிகவும் கோபமாக பாலாஜியை நோக்கி பல கருத்துக்களை கூறினார்.

இதற்கு எந்த ஒரு பதிலையும் கூறாமல் இருந்த பாலாஜி தற்போது இது பற்றி கூறுகையில், இந்த படத்தில் இயக்குனர் பாலாஜி என்று இருந்திருந்தால் அவர் என்னை கேள்வி கேட்க உரிமை உண்டு.

மேலும், என் போன் நம்பர் அவரிடம் உள்ளது, அவரே போன் செய்து கேட்டு இருக்கலாமே’ என்று லட்சுமி ராமகிருஷ்ணன்னுக்கு செமையாக பல்பு கொடுத்துள்ளார்.