லட்சுமி ராமகிருஷ்ணன்:

2018  ஆண்டு அதிகமான விமர்சனங்களை பெற்று வந்த ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. 

நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்த நிகழ்ச்சி 'சொல்வதெல்லாம் உண்மை'.   இதில் காதல் பிரச்சினைகள், கள்ளக் காதல் பஞ்சாயத்துகள், குழந்தை கடத்தல் முயற்சிகள், சொத்துப் பிரச்சினைகள் என பல பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

8 வருடங்களுக்கு மேல் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி,  இந்த வருடம் தொடக்கத்தில் திடீரென முடக்கப்பட்டது.  ஏன் எனில் தனிமனித வாழ்க்கையில் இந்த நிகழ்ச்சி தலையிடுவதாகவும் இந்த நிகழ்ச்சியினால் 2016ஆம் ஆண்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார் இதனால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆர்யா:

சின்னத்திரையில் நாடகங்கள் பார்ப்பதையே பிரதான பொழுது போக்காக கொண்டிருந்த இல்லத்தரசிகளை மற்ற நிகழ்ச்சிகள் மீதும் கவனம் பதியவைத்த பட்டியலில் இணைந்திருக்கிறது,  நடிகர் ஆர்யாவின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை'.

கடந்த ஆண்டு இறுதியில் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், சுயம்வரம் நடத்தி மணப்பெண்ணை தேர்வு செய்யப் போவதாகவும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அடுத்த சில நாட்களிலேயே கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆர்யாவின் சுயம்வரம், நிகழ்ச்சி பற்றிய தகவல் வெளியானது.  இதில் கலந்துகொண்டு ஆர்யாவை கரம்பிடிக்க இலங்கை , ஆஸ்திரேலியா , கேரளா, கும்பகோணம், துபாய்,  உள்ளிட்ட இடங்களில் இருந்து  12 பெண்கள் களத்தில் குதித்தனர்.

எப்படியும் 12 பெண்கள் ஒருவரையாவது ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.  இந்த போட்டியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு நிகழ்ச்சி அடுத்த சுற்றுக்கு நகர்ந்தது இறுதியில் மூன்று மூன்று பேர் சுயம்வர நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அவர்களில் ஒருவரை நிச்சயம் ஆர்யா திருமணம் செய்து கொள்வார்.  அதற்கான அறிவிப்பை மேடையிலேயே அறிவிப்பார் என்று நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மட்டுமின்றி 3 பெண்களின் பெற்றோர்களும் நினைத்தனர். 

 ஆனால் ஆர்யாவோ மூன்று பேரில் இப்போது ஒருவரை தேர்வு செய்தால், மற்ற இரண்டு பேர் வருத்தத்தைத் உள்ளவர்கள் என்று கூறி எதிர்பார்ப்புக்கு முட்டுக்கட்டை போட்டார்.  தான் யாரை திருமணம் செய்து கொள்வேன் என பின்னர் தெரிவிப்பதாக கூறிய ஆர்யா திருமணம் செய்து கொள்ளும் பேச்சையே நிறுத்திவிட்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் 12 பெண்களையும் ஏமாற்றியது  தவிர ஒரு பெண்ணை கூட திருமணம் செய்து கொள்ளவில்லை இதனால் இந்த நிகழ்ச்சி கடும் விமர்சனங்களை சந்தித்தது.