lakshmi rai talk about lady super star
நடிகை ராய் லட்சுமி நடித்து நாளை வெளியாகவுள்ள திரைப்படம் ஜூலி 2 . இந்தப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தற்போது ஜூலி 2 படத்தில், உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பியதற்கு, படத்தின் ட்ரைலரை வைத்து எதையும் முடிவு செய்ய வேண்டாம் என்றும், இந்தப் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் மிகவும் பரிதாபமானது எனவும் பதிலளித்தார்.

அப்போது, சினிமாத் துறையில் அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்வது பற்றி எழுப்பப் பட்ட கேள்விக்கு.. அட்ஜஸ்ட்மென்ட் செய்திருந்தால் தற்போது நான் தான் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பேன் என்றும் அப்படி நான் இதுவரை அட்ஜஸ்ட்மென்ட் செய்யாததால் தான் சாதாரண நடிகையாக நடித்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இவர் இப்படி கூறியுள்ளது தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவைக் குறிவைத்து தான் கூறியுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. இதன் மூலம் நயன்தாராவை புது சர்ச்சையில் சிக்க வைத்துள்ளார் ராய் லட்சுமி.
