உயிரும் உலகமும் நீங்களே.. மகன்களோடு சில்லென்ற பயணம் - கியூட் வீடியோ வெளியிட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்!

Lady Super Star Nayanthara : பிரபல நடிகை நயன்தாரா கடந்த 2022ம் ஆண்டு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்துகொண்டார்.

Lady Super Star Nayanthara with her sons and husband vignesh viral video ans

கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான "நானும் ரவுடிதான்" திரைப்படத்தின் மூலம் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவணுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வாடகை தாய் மூலம் நயன்தாராவிற்கு உலகு மற்றும் உயிர் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். 

அந்த சமயத்தில் இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க துவங்கியதோடு தனது புதிய 9 ஸ்கின்ஸ் என்கின்ற நிறுவனத்தையும் தனது கணவர் விக்னேஷ் சிவனோடு இணைந்து துவங்கி வெற்றிகரமாக அதிலும் பயணித்து வருகின்றார். 

மணிரத்னம் சுஹாசினியின் திருமண போட்டோவை பார்த்திருக்கீங்களா? யாரும் பார்த்திடாத புகைப்படம்..

விக்னேஷ் சிவன் அவர்களும் தற்பொழுது தனது அடுத்த பட பணிகளை துவங்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்ட பலரும் அந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். அதேபோல நயன்தாரா அவர்களும் மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் டெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இந்நிலையில் தனது இரு மகன்கள் மற்றும் கணவரோடு அவர் காரில் செல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் நயன்தாரா. அவருடைய ரசிகர்கள் பலரும் அதற்கு தங்கள் அன்பை கமெண்ட் செக்ஷனில் அள்ளித்தெளித்து வருகின்றனர். 

சூரிக்கு தொடரும் பன்னாட்டு அங்கீகாரம்.. பெர்லின் சர்வதேச திரைப்பட விழா - திரையிடப்படும் கொட்டுக்காளி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios