Kottukkaali in Berlin : பிரபல இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கொட்டுக்காளி. பிரபல நடிகர் சூரி இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் சற்குணத்தின் உதவி இயக்குனர் தான் பி. எஸ் வினோத் ராஜ், சிறுவயது முதலிலேயே திரைப்படத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் நாளடைவில் அவரை இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் உயர்த்தியது. கடந்த 2021 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான Pebbles என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி கண்ட இயக்குனர் தான் வினோத் ராஜ். 

நடிகையுடன் நைட் பார்ட்டி.. கையில் சிகரெட்டுடன் ராம் கோபால் வர்மா.. வியூஹம் படத்திற்கு வேற லெவல் ப்ரமோஷன்!

அவருடைய இயக்கத்தில் தற்பொழுது உருவாகியுள்ள படம் தான் கொட்டுக்காளி, இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சூரி அவர்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் இந்த பிப்ரவரி மாதம் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெர்லினில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்த திரைப்படம் தேர்வானது.

Scroll to load tweet…

இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 5 சிறப்பு காட்சிகளாக கொட்டுக்காளி திரைப்படம் மெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. அண்மையில் நடிகர் சூரியின் "ஏழு கடல் ஏழுமலை" திரைப்படத்திற்கு ரோட்டேர்டன் திரைப்பட விழாவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது அனைவரும் அறிந்ததே. 

மணிரத்னம் சுஹாசினியின் திருமண போட்டோவை பார்த்திருக்கீங்களா? யாரும் பார்த்திடாத புகைப்படம்..