Nayanthara : பிரபல நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இரு மகன்களுடன் வெளிநாட்டில் தனது விடுமுறையை கழித்து வருகிறார்.

கேரளாவில் பிறந்து மலையாள மொழி டிவி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் தான் பிரபல நடிகை நயன்தாரா. அதன் பிறகு மலையாள மொழியில் படங்களில் நடிக்க தொடங்கிய அவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சரத்குமாரின் "ஐயா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கோலிவுட் பயணத்தை தொடங்கினார். 

அதே ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படமான "சந்திரமுகி" படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை தவிர, கோலிவுட் உலகில் இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளர் நயன்தாரா. 

Actress Iswarya Menon : லோ ஹிப் சேலை.. கூடுதல் அழகில் இளசுகளை ஈர்க்கும் ஐஸ்வர்யா மேனன் - ஹாட் பிக்ஸ் இதோ!

75 படங்களுகளும் மேல் நடித்துள்ள நயன்தாரா, கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த சூழலில் கடந்த 2023ம் ஆண்டு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். 

உயிர் மற்றும் உலகு என்கின்ற பெயர்களை அவர்களுக்கு சூட்டி மகிழ்ந்தனர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இப்பொழுது ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று பல மொழிகளில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் நயன், தனக்கென ஒரு நிறுவனத்தையும் துவங்கி அதன் மூலம் பல்வேறு அழகு சாதன மற்றும் பெண்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை விற்பனை செய்து வருகிறார். 

இதற்கிடையில் தனது கோடை விடுமுறையை கழிக்க தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நடிகை நயன்தாரா. பூக்கள் பூத்துக் குலுங்கும் ஒரு அழகிய பூங்காவிற்குள் சென்று அந்த மலர்களுக்கு நடுவே அவர் நடந்து செல்லும் காட்சியை வீடியோவாக தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…

"பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டால்" என்ற பாடல் அந்த வீடியோவில் ஒலிக்க, நயன்தாராவை பூவென வர்ணித்து அவருடைய ரசிகர்கள் லைக்குகளை அள்ளித்தெளித்து வருகின்றனர்.

Aditi Shankar: 'இந்தியன் 2' ஆடியோ லான்ச்சில் Ragged லுக்கில் ஆட்டம்.. படத்தில்.. பின்னி பெடல் எடுத்த அதிதி!