தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை  எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். 

 

 

இதையும் படிங்க: படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!

நடிப்பிலும்  “பில்லா” போன்ற கிளாமர் படமானாலும் சரி,  “அறம்” போன்ற ஹீரோயின் சப்ஜெக்ட் ஆனாலும் சரி கலக்கி அடிக்கிறார்.  இப்படி ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாராவின் அழகு ரகசியம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்து காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த செய்தி. “நானும் ரவுடி தான்” படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகின்றன. 

 

இதையும் படிங்க:  ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம்ம கிளாமர்... 49 வயசிலும் கவர்ச்சியில் குறை வைக்காத ரம்யா கிருஷ்ணன்...!

கொரோனா லாக்டவுன் நேரத்தில் இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். சமீபத்தில் நயன்தாராவிற்கு கொரோனா என வதந்தி பரவியது. அதற்கு அசத்தலான குட்டி பாபா வீடியோ ஒன்றை வெளியிட்ட விக்னேஷ் சிவன், அதை தாறுமாறு வைரலாக்கி வதந்திக்கு தக்க பதிலடி கொடுத்தார். அந்த வீடியோவை நயன் ரசிகர்கள் ரசித்து முடிப்பதற்குள் மற்றொரு வீடியோ வெளியாகி தாறுமாறு வைரலாகி வருகிறது. 

 

இதையும்  படிங்க: “அது கல்யாணமே இல்ல”... உண்மையை ஓபனாக போட்டுடைத்த வனிதா வக்கீல்...!

கடந்த ஆண்டு நயன், நடிகர் நிவின் பாலியுடன் லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். செம்ம ஹிட்டான இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நிவின் பாலி உள்ளிட்ட படக்குழுவினருடன் நயன்தாரா ஜாலியாக சிரித்து பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஜு வர்கீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் நயன்தாராவின் க்யூட் ரியாக்‌ஷனையும், சிரிப்பையும் பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போகின்றனர். இதோ அந்த வீடியோ... 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഞാൻ മുങ്ങി 🥱

A post shared by Aju Varghese (@ajuvarghese) on Jun 29, 2020 at 9:24am PDT