இந்நிலையில் நயன்தாராவின் பழைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. பக்கா கேரளா ஸ்டைலில் புடவை கட்டி, தலை நிறைய மல்லிகை பூ வைத்து, கழுத்து நிறைய நகை போட்டு அழகு சிலை போல் காட்சியளிக்கும் நயன்தாராவின் புகைப்படம் தான் அது.அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சொக்க தங்கம், லேடி சூப்பர் ஸ்டார் மாஸ் என கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மட்டுமில்லாமல், ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. அசத்தல் நடிப்பால் அசாத்திய உயரத்திற்கு சென்றுள்ள நயன்தாராவை ரசிகர்கள் செல்லமாக "லேடி சூப்பர் ஸ்டார்" என அழைத்து வருகின்றனர். ஓவர் கவர்ச்சி காட்டி நடித்த "பில்லா"வானாலும் சரி, கெத்து காட்டி நடித்த "அறம்" படமானாலும் சரி நயன் தாராவை அடித்துக்கொள்ள முடியாது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு நயனுக்கு எளிதில் கிடைத்தது அல்ல, எத்தனையோ படிகளை கடந்து தான் உச்சத்திற்கு வந்துள்ளார் நயன்தாரா. 

துரோகம், ஏமாற்றம், காதல் தோல்வி என அனைத்தையும் கடந்த நயன்தாரா சினிமாவை விட்டே போய்விடுவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், அடிக்க அடிக்க மெருகேறும் தங்கமாக எழுந்து நின்றார். "ராஜா ராணி" படம் மூலம் நயன்தாரா கொடுத்த கம்பேக் மிகப்பெரியது. அந்தப்படத்தில் ஆர்யா, ஜெய் என்ற இரண்டு கதாநாயகர்களையும் பின்னுக்குத் தள்ளியது நயனின் அசத்தல் நடிப்பு. படிப்படியாக உயர்ந்து நின்ற நயன்தாராவிற்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அஜித்துடன் விஸ்வாசம், விஜய் உடன் பிகில் என தொட்ட படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டானது. 

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. அந்த படத்தின் ட்ரெய்லரில் நயனைப் பார்த்து வியக்காதவர்கள் கிடையாது. சூப்பர் ஸ்டார் சொன்னது போல அழகும், கிளாமரும் ஒன்றாக கலந்த கலவையாக நின்ற நயன்தாராவின் அழகைப் பார்த்து அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

View post on Instagram