லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் உடன் நடித்திருந்த பிகில் திரைப்படம் தீபாவளி ட்ரீட்டாக வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தர்பார் படத்தில் நடித்துள்ளார். அப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி கதை எழுதியுள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துவருகிறார். 

அந்த படத்திற்காக பய பக்தியுடன் விரதம் இருந்த நயன்தாரா, தற்போது கன்னியாகுமரியில் காதலர் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து கோவில், கோவிலாக தரிசித்து வருகிறார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதனிடையே, மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நெற்றிக்கண் படத்தில் நடித்து வந்தார். பிளைண்ட் என்ற கொரியன் படத்தின் ரீமேக்கான அதில் நயன்தாரா, கண்பார்வையற்ற பெண்ணாக நடித்தார். நயனின் காதலரான விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வந்த அப்படத்தின் முதற்கட்ட் படப்பிடிப்பு சென்னையில் நிறைவுற்றது. 

இந்நிலையில் பொருளாதார பிரச்சனை காரணமாக நெற்றிக்கண் படம் கைவிடப்பட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. நயனின் 65வது படமான அதில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் லேடி சூப்பரை பார்க்கலாம் என கனவு கண்ட அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.