இது வெறும் ஆரம்பம் தான் கண்ணா.. முதல் நாள் வசூலில் கெத்து காட்டிய ஜவான் - லேடி சூப்பர் ஸ்டாரின் மாஸ் பதிவு!
பிரபல தமிழ் இயக்குனர் அட்லீ பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படம் நேற்று செப்டம்பர் 7ம் தேதி உலக அளவில் வெளியானது. இந்நிலையில் வெளியான முதல் நாளிலேயே பாலிவுட் சினிமா உலகில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

இயக்குனர் அட்லீ 'பிகில்' படத்திற்கு பிறகு, தன்னுடைய அடுத்த படத்தை நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குவதை உறுதி செய்தார், ஆனால் அதன் பிறகு பெருந்தொற்று குறுக்கிட, மேலும் ஷாருக்கானின் சொந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட அந்த படம் தொடர்ந்து உருவாவது தள்ளிப்போனது. இந்த சூழலில் தான், சமீபத்தில் இந்த பட வேலைகளை வெற்றிகரமாக முடித்தார் அட்லீ.
தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று இந்த திரைப்படம் வெளியானது. மேலும் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான, 'பதான்' திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்த நிலையில், 'ஜவான்' திரைப்படம் இந்த சாதனையை முறியடிக்குமா? என எதிர்பார்க்கப்பட்டது.
அவர் அன்பானவர்.. முதல் படத்தில் எனக்கு உதவிய மாரிமுத்து - பல நினைவுகளை பகிர்ந்த நடிகர் சூர்யா!
இந்நிலையில், ஜவான் படம் வெளியான முதல் நாளே தனது வெற்றியை உறுதி செய்துள்ளது என்று தான் கூறவேண்டும். பல விமர்சனங்களை கடந்து வந்துள்ள இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஒரு மாபெரும் ஹிட் படமாக மாறியுள்ளது ஜவான் என்றால் அது சற்றும் மிகையல்ல. ஹிந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளிலும் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ளது ஜவான்.
ஹிந்தியில் மட்டுமே 'ஜவான்' திரைப்படம் 129.6 கோடி வசூலித்துள்ளது, மேலும் ஹிந்தியில் முதல் நாளிலேயே அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்கிற சரித்திர சாதனையை 'ஜவான்' திரைப்படம் படைத்துள்ளது. இதனை கண்டு பலரும் அட்லீ மற்றும் ஷாரூக்கானுக்கு தங்களது வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் அண்மையில் இன்ஸ்டாகிராம் தளத்திற்கு என்ட்ரி கொடுத்த நடிகை நயன்தாரா, "இது வெறும் ஆரம்பம் தான்" என்று கூறி, ஜவான் பட வசூல் சாதனையை குறிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Jawan Box Office: ஹிஸ்டாரிக் காலெக்ஷன்.! முதல் நாளே பாலிவுட் திரையுலகை அதிர வைத்த 'ஜவான்' பட வசூல்!