பிரபல நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் இறந்த நிலையில் திரை பிரபலங்கள் பலரும் அவரது குடும்பத்தாருக்கு தங்களது ஆறுதல்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா, மாரிமுத்துவோடு பழகிய தருணங்கள் குறித்து தற்பொழுது பகிர்ந்துள்ளார்.

பிரபல இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து அவர்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் பயணித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக வெள்ளித்தறையில் பல குணச்சித்திர கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த மாரிமுத்துவிற்கு கிடைத்த மாபெரும் திருப்புமுனை தான் எதிர்நீச்சல் நாடகம். 

இந்த நாடகத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும், தன் சக நடிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக எதிர்நீச்சல் நாடகம் மூலமாக அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் கிடைத்தது. 

பணியின் போதே உயிர் நீத்த பாக்கியசாலி! மாரிமுத்து மறைவுக்கு சிம்பு, எம்.எஸ்.பாஸ்கர், கார்த்தி ஆகியோர் இரங்கல்!

மனப்பாக்கத்தில் தனது கனவு வீட்டை கட்டி முடித்துள்ள நடிகர் மாரிமுத்து, அதில் சென்று தனது வெற்றி வாழ்க்கையை துவங்குவதற்கு முன்பாகவே அவர் இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்நீச்சல் நாடகத்தில் அவருடன் பணியாற்றிய நடிகை நடிகர்கள் அவருடைய இறந்த உடலைக் கண்டு கதறி அழுத காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Scroll to load tweet…

இந்நிலையில் பிரபல நடிகர் சூர்யா அவர்கள் மாரிமுத்து குறித்து சில தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட தகவலில் "எனது முதல் திரைப்படமான நேருக்கு நேர் திரைப்படத்தில் எனக்கு உதவிய சில உதவி இயக்குனர்களில் மிகச்சிறந்தவர் மாரிமுத்து, அவருடைய இயல்பான அன்பான குணம் அனைவரையும் வெகு விரைவில் கவரும் வண்ணம் இருக்கும், அவரை தான் இனி மிகவும் மிஸ் செய்ய போவதாகவும், அவருடைய குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களையும்" தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

நீ பண்ணுன கிரிமினல் வேலையெல்லாம் சொல்லவா! சீரிய சக்தி... குணசேகரனின் வேற லெவல் ரியாக்ஷன்! எதிர்நீச்சல் புரோமோ!