. அந்த போட்டோவை அவரது காதலர் விக்னேஷ் சிவன் சூப்பர் கேப்ஷனுடன் சோசியல் மீடியாவில் உலவ விட்டுள்ளார். 

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் இந்த தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. 

இதையும் படிங்க: கொரோனாவை வைத்து கோடி, கோடியாய் சம்பாதிக்கும் சீனா... மெடிக்கல் சப்ளைஸில் கொட்டும் துட்டு...!

இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஒற்றுமை ஒளியை நிரூபிக்கும் விதமாக நேற்று இரவு 9 மணி முதல் சரியாக 9 நிமிடத்திற்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைந்துவிட்டு அகல் விளக்கு அல்லது டார்ச் லைட் மூலம் ஒளியேற்றும் படி பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

View post on Instagram

அதன்படி, சாமானியர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களது வீடுகளில் விளக்கை ஏற்றி, ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தினர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் பிரதமர் சொன்னதை தட்டாமல் கடைபிடித்துள்ளார். அந்த போட்டோவை அவரது காதலர் விக்னேஷ் சிவன் சூப்பர் கேப்ஷனுடன் சோசியல் மீடியாவில் உலவ விட்டுள்ளார். 

View post on Instagram

இதையும் படிங்க: கணவரை பக்கத்தில் வைத்துக் கொண்டே... ஜெயம் ரவி, அல்லு அர்ஜூனுக்கு சவால் விட்ட ஸ்ரேயா... வைரலாகும் வீடியோ...!

அதில், “டியர் கொரோனா கடவுளை வணங்குவதற்காக விளக்கேற்றி வந்த நாங்கள், இன்று உனக்காக தீபம் ஏற்றியுள்ளோம். உன்னை வேண்டி கேட்டுக்கொள்கிறோம் எங்களைம் விட்டு போய் விடு, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப விடு. ப்ளீஸ் கொஞ்சம் கருணை காட்டு” என்று பதிவிட்டுள்ளார். இத்துடன் இருளிலும் ஒளிரும் க்யூட் நயன்தாராவின் அசத்தல் போட்டோவும் வைரலாகி வருகிறது.