தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தமிழில் விஜய்யுடன் நடித்த "பிகில்" திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்துள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக "தர்பார்" படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தற்போது ஆர்.ஜே.பாலாஜியுடன் "மூக்குத்தி அம்மன்" படத்தில் நடிக்க உள்ளார். அடுத்ததாக தல அஜித்துடன் "வலிமை" படத்திலும் நயன்தாரா ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படு பிசியாக படங்களில் நடித்து வரும் நயன்தாரா, சின்ன ஹாலிடே கேப் கிடைச்சாலும் காதலர் விக்னேஷ் சிவன் உடன் வெளிநாட்டிற்கு டூர் கிளம்பிவிடுகிறார். 

தனது பிறந்தநாளை முன்னிட்டு காதலர் விக்னேஷ் சிவன் உடன் நயன்தாரா அமெரிக்காவில் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினருடன் தேங்க்ஸ் கிவிங் பார்ட்டி கொண்டாடிய நயனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி செம்ம வைரலானது. குறிப்பாக அந்த பார்ட்டியில் டர்க்கி சிக்கன் உடன் நயன்தாரா எடுத்த மேஜிக் வீடியோ நெட்டிசன்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியது. "மூக்குத்தி அம்மனுக்கு விரதம் இருக்கிறதா சொல்லிட்டு, வான்கோழி வறுவல் உடன் போட்டோவா" என நெட்டிசன்கள் சரமாரியாக வறுத்தெடுத்தனர்.

இதையும் படிங்க: அப்போ நயன்தாரா... இப்போ அதுல்யா... கொளுத்திப்போட்ட நெட்டிசன்கள்... பற்றி எரியும் ட்விட்டர் ட்ரெண்டிங்...!

இந்த சமயத்தில், கொதித்து போய் இருக்கும் நெட்டிசன்களை ஆற்ற சூப்பர் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் நயன். போகிற போக்கில் ஏர்போர்ட் ஒன்றில் எதார்த்தமாக எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. மேக்அப் ஏதுமின்றி, வெள்ளை நிற டீ-சர்ட்டில் அழகாக நின்று போஸ் கொடுத்துள்ளார் நயன்தாரா. ரேண்டம் கிளிக் என்ற டேக் உடன் தனது டுவிட்டர் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டுள்ள அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.