தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மட்டுமில்லாமல், ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. அசத்தல் நடிப்பால் அசாத்திய உயரத்திற்கு சென்றுள்ள நயன்தாராவை ரசிகர்கள் செல்லமாக "லேடி சூப்பர் ஸ்டார்" என அழைத்து வருகின்றனர். ஓவர் கவர்ச்சி காட்டி நடித்த "பில்லா"வானாலும் சரி, கெத்து காட்டி நடித்த "அறம்" படமானாலும் சரி நயன் தாராவை அடித்துக்கொள்ள முடியாது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு நயனுக்கு எளிதில் கிடைத்தது அல்ல, எத்தனையோ படிகளை கடந்து தான் உச்சத்திற்கு வந்துள்ளார் நயன்தாரா. 

துரோகம், ஏமாற்றம், காதல் தோல்வி என அனைத்தையும் கடந்த நயன்தாரா சினிமாவை விட்டே போய்விடுவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், அடிக்க அடிக்க மெருகேறும் தங்கமாக எழுந்து நின்றார். "ராஜா ராணி" படம் மூலம் நயன்தாரா கொடுத்த கம்பேக் மிகப்பெரியது. அந்தப்படத்தில் ஆர்யா, ஜெய் என்ற இரண்டு கதாநாயகர்களையும் பின்னுக்குத் தள்ளியது நயனின் அசத்தல் நடிப்பு. அப்படி அரும்பாடு பட்டு நயன்தாரா எடுத்த "லேடி சூப்பர் ஸ்டார்" பட்டத்திற்கு போட்டியாக களம் இறங்கியுள்ளார் அதுல்யா ரவி. 

பக்கா கோவை பெண்ணான அதுல்யா ரவி, "காதல் கண் கட்டுதே" என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கொங்கு தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். "நாடோடிகள் 2", "ஏமாளி" போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது அதுல்யா ரவி நடிப்பில் வெளியாகியுள்ள "அடுத்த சாட்டை" திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கல்லூரி மாணவியாக நடித்துள்ள அதுல்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் உடன் அதுல்யா நடித்துள்ள "கேப்மாரி" திரைப்படத்தைக் காண ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். அந்தப்படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து அதுல்யா நடித்துள்ள ஹாட் காட்சிகள் டீசரில் வெளியாகி செம்ம ட்ரெண்டானது. 

இந்நிலையில் தமிழக ரசிகர்களின் மனதில் ஷேர் போட்டு அமர்ந்துள்ள அதுல்யா, சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள நயன்தாராவை ஓரம் கட்டிவிடுவார் போல தெரிகிறது. அதற்கு காரணம் சமீபத்தில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #LittleLadySuperStarAthulya என்ற ஹேஷ்டேக் தான். எந்த "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற வார்த்தை நயன் தாராவை உச்சத்திற்கு கொண்டு சென்றதோ, அதே வார்த்தையுடன் லிட்டில் என்பதை மட்டும் சேர்த்து வெற லெவலில் பிரபலமடையச் செய்து வருகின்றனர் அதுல்யா ரசிகர்கள். இதெல்லாம் எவ்வளவு தூரம் போகுங்கிறத பொறுத்திருந்து தான் பார்க்கனும்.