Asianet News TamilAsianet News Tamil

இதை பற்றி பேசுறீங்களே உங்களுக்கு வெக்கமா இல்ல.! பலர் மத்தியில் மதுவந்தியை சரமாரியாக கேள்வி கேட்ட பெண்!

பள்ளியில்  டிரஸ்டியாக இல்லை என்பது குறித்து விளக்கமளித்து விளக்கம் அளித்துள்ள ஒரு ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது.

lady angry talk for madhuvandhi viral video
Author
Chennai, First Published May 26, 2021, 4:32 PM IST

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. பிஎஸ்பிபி பள்ளி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அரை நிர்வணமாக ஆன்லைன் கிளாஸ் எடுப்பது, மாணவிகளுக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்புவது, நள்ளிரவில் வீடியோ கால் செய்வது என ராஜகோபாலனின் அத்துமீறல்கள் அதிகரித்த போதும் அதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. 

lady angry talk for madhuvandhi viral video

இந்த ஆசிரியரின் அதிமீறல்களுக்கு, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கொந்தளித்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இப்பள்ளியில் Y.G. மகேந்திரன் அவர்களின் மகள் மதுவந்தி ட்ரஸ்டியாக  இருப்பதாகவே கூறப்படுகிறது.  ஆனால் ஆசிரியர் விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், தான் பள்ளியில்  டிரஸ்டியாக இல்லை என்பது குறித்து விளக்கமளித்து விளக்கம் அளித்துள்ள ஒரு ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது.

lady angry talk for madhuvandhi viral video

டுவிட்டர் ஸ்பேஸ் விவாதத்தில் மதுவந்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் சில சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இந்த விவாதத்தின் போது ஒரு பெண், 'மதுவந்தியிடம் சரமாரியான கேள்விகளை கேட்டு கதிகலங்க வைத்துள்ளார். அதாவது.... இந்த உடையாடலின் போது, மதுவந்தி மேடம் உங்க பேரை சொல்லவே கூச்சமா இருக்கு.   நீங்க அந்த பள்ளியில் ட்ரெஸ்டியாக இருக்கும் நிலையில், ஒரு டீச்சர் இப்படி அசிங்கமான காரியங்களை செய்துள்ளார். அதையெல்லாம் தட்டி கேட்பதை விட்டுட்டு, இங்கே வந்து பள்ளி நிறுவனங்களை தாக்கி பேசுகிறார்கள் என்று சொல்றீங்களே, உங்களுக்கு வெக்கமாக இல்லையா?  என கேட்டுள்ளார். 

lady angry talk for madhuvandhi viral video

இதை தொடர்ந்து இதற்க்கு பதிலளித்த மதுவந்து, "நான் பத்ம சேஷாத்ரி பள்ளியில் டிரஸ்டியாக இல்லை, முன்னாள் மாணவர் என்கிற அடிப்படையில் உறுப்பினராகத்தான் உள்ளேன். தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளேன். நான் படித்த பள்ளியில் இந்த மாதிரி கொச்சையான சம்பவங்களில் ஆசிரியர் ஈடுபட்டதை நினைத்தால் அசிங்கமாக உள்ளது. மற்றபடி பள்ளியின் மாணவியாக இருக்கவோ, கல்வியாளராக இருக்கவோ எனக்கு அசிங்கமும், அவமானமும் இல்லை. இந்துக்களையும், பிராமணர்களையும் தவறுதலாக பேசுவதை என்னால் பொறுக்க முடியாது. என கூறியுள்ளார்.

இந்த உடையாடல் குறித்த ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது... 
 

Follow Us:
Download App:
  • android
  • ios