தமிழகத்தை ஆளும் கட்சியான, அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. அதே போல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வகித்து வந்த முதலமைச்சர் பதவிக்காக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பிலும் கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 131 பேர் ஒரு கூவத்தூர் ரிசார்ட்டி சிறைவைக்க பட்டதாக செய்தி வெளியாகியுள்ளதை தொடர்ந்து, காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்விட்டர் மூலம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேர் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ள நிலையில் எஞ்சிய எம்எல்ஏக்களை காப்பாற்றிக் கொள்ள அவர்களை சொகுசு பேருந்தில் கடத்தி சிறைவைத்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அவர்கள் யாருடனும் தொடர்புகொள்ளமுடியாதவாறு அவர்களுடைய கைபேசிகளும் பறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகையும் தேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


அதில் கடத்தப்பட்டதுப்போல் 131 எம்எல்ஏக்கள் சொகுசுப் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை பற்றிதான் தற்போது யோசிக்கிறேன். 

ஜனநாயகத்தில், இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு சுயமரியாதை என்று ஏதாவது இருக்கிறதா...? சிறையில் இருக்கும் குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதற்கு இந்தப் பெண்மணிக்கு என்ன அதிகாரம் உள்ளது . பணமா? அதிகாரமா? என ஏளனமாக கேள்வி எழுப்பியுள்ளார்.