நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு முன்பே... அவரின் மூத்த மகள் ஜான்வி 'தடக்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், ஸ்ரீ தேவி மறைவுக்கு பின் தான் இந்த திரைப்படம் வெளியானது. 

'தடக்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் ஜான்விக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் ஜான்வியை தொடர்ந்து, அவருடைய தங்கை குஷியும்  சினிமாவில் ஹீரோயின் ஆகும் முனைப்பில் உள்ளனர். 

இதனால் அவ்வப்போது தான் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு, மிகவும் கவர்ச்சியான உடைகளில் வந்து, அனைவருடைய பார்வையையும் ஈர்த்து வருகிறார். 

இந்நிலையில், அவர் அம்பானி மகள் இஷாவின் நிச்சயதார்த்தத்திற்கு மிக கவர்ச்சியான உடையில் சென்றபோது எடுத்த புகைப்படம் வெளிவந்துள்ளது. அவை இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

இதன் மூலம், ஏற்கனவே பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் அக்காவையே ஓரம் கட்டி விடுவார் குஷி என நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

புகைப்படம் இதோ: