பிரபல இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான, சுதீப் மற்றும் நித்யா மேனன் நடித்த, 'முடிஞ்சா இவனபுடி' படத்தை இயக்கினார்.
பிரபல இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார், கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான, சுதீப் மற்றும் நித்யா மேனன் நடித்த, 'முடிஞ்சா இவனபுடி' படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு பின், கடந்த மூன்று வருடங்களாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். தற்போது என்.டி.ஆர் பாலகிருஷ்ணாவை வைத்து, 'ஜெய் சிம்ஹா' என்கிற படத்தை இயக்க உள்ளார்.
தெலுங்கில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளிநாட்டில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தை சுற்றி உள்ள இடங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா ஜோடியாக சோனல் சவுகான் நடிக்க உள்ளதாகவும், இரண்டாவது நாயகியாக நடிகை வேதிகா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களை தொடந்து, இந்த படத்தில் பிரபல நடிகை நமீதா மிரட்டல் வில்லி வேடத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jul 28, 2019, 2:11 PM IST