Krishnaswamy sent Notice to Kamal for 100 crore compensation
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் “பிக்பாஸ்” நிகழ்ச்சி தான் தமிழகத்தில் எங்குப் பார்த்தாலும் டாக் ஆப் தி ஷோ.
என்னதான் பிக் பாஸில் பல்வேறு நெகட்டிவ் சர்ச்சைகள் இருந்தாலும் அதனை எளிய மக்கள் பொழுது போக்காக மட்டுமே பார்க்கின்றனர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
அதில், காயத்ரி ரகுராம் ஒருமுறை நடிகர் பரணியை பார்த்து 'சேரி பிஹேவியர்' என கூறியது பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில், “குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும்படி பேசிய காயத்ரி, தொகுத்து வழங்கிய கமல், அந்த வார்த்தையை எடிட் செய்யாமல் ஒளிபரப்பிய விஜய் டிவி ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்,
அல்லது 100 கோடி ருபாய் நஷ்டஈடு தரவேண்டும்” என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதன்படி ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரியின் பேச்சுக்கு செய்தியாளர்களை அழைத்து கமல் விளக்கம் கொடுத்துவிட்டார் என்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயதிரியை லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார் என்பதும் பிக் பாஸை தொடர்ந்து பார்க்கும் அனைவருக்கும் தெரியும்.
பாவம் டாக்டர்.கிருஷ்ணசாமி இத்தனை நாள் கழித்து இப்போதுதான் மேலிடத்து உத்தரவு வந்தது போலும்.
