மறைந்த நடிகை மனோரமா இறப்பதற்கு முன்பு நடிக்க ஒப்புக் கொண்ட திரைப்படம் ‘பேராண்டி’. இந்த படம் முழுக்க முழுக்க பாட்டி மற்றும் பேரன் அன்பை கூறும் கதை.

இந்த படத்தின்  கதையை மனோரம்மாவிடம் இயக்குனர் கூறியபோது, எந்த ஒரு மறுப்பும் கூறாமல் இந்த படத்தில் நடிக்க மனோரமா ஒற்றுக்கொண்டார். மேலும் இந்த படத்திற்காக ஒரு பாடலையும் சொந்த குரலில் பாடி கொடுத்தார்.

ஆனால் துரதஷ்டவசமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் போது மனோரமா, இறந்தார். இதனால் இந்த படத்தை இயக்கமுடியாமல் பல நாட்களாக இந்த படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் மனோரமா கதாபாத்திரத்தில் நடிக்க கோவை சரளா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கோவைசரளா, காமெடியை தாண்டி... கொம்பன், பலே வெள்ளையத்தேவா, ஆகிய படங்களில் குணச்சித்திரம் கலந்த காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்திலும் அது போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் தான் அவர் நடிக்கவுள்ளார்.  

இந்த 'பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய பாடல்... கோவை சரளா பாடியது போல் பயன்படுத்த  பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.