கமல் உள்ளிட்ட பல பெரும்புள்ளிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து ‘கோமாளி’பட ட்ரெயிலரில் இடம்பெற்றுள்ள  ரஜினி  தொடர்பான காட்சிகள் நீக்கப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார். ஆனால் இச்செய்தி அப்லோட் செய்யப்படும் மதியம் 2.50 மணி நிலவரம் வரை அக்காட்சி நீக்கப்படவில்லை.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,சம்யுக்தா, யோகி பாபு மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கும் படம் ‘கோமாளி’.இதில் ஜெயம் ரவி ஆதிகால மனிதன் துவங்கி பல்வேறு கெட் அப்களில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் நேற்று முன் தினம் இப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. அதில் ஒரு காட்சியில் கோமா ஸ்டேஜில் இருந்து 16 வருடங்களுக்குப் பிறகு  எழும் ஜெயம் ரவி யோகிபாபுவிடம் ‘இது எந்த வருஷம் என்று கேட்க அவர் 2017 என்று கூறி ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாகப் பேசும் டி.வி காட்சி ஒன்றைக் காட்டுகிறார். உடனே அதையே காரணமாக வைத்து ‘இது 1996. நான் நம்ப மாட்டேன்’என்பார். அதாவது 96லிருந்து 2017 வரை தனது அரசியல் அறிவிப்பில் இருந்து எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்று நக்கலடித்திருக்கிறார்கள்.

அந்த ட்ரெயிலர் மக்களால் பயங்கரமாக ரசிக்கப்பட்ட நிலையில் இன்று வரை 40 லட்சம் பார்வையாளர்களை அள்ளியுள்ளது. அதே சமயம் ரஜினி ரசிகர்கள் துவங்கி கமல் வரை அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் தெரிவித்தனர். அந்த எதிர்ப்பு அதிகரித்த நிலையில் சர்ச்சைக்குரிய ரஜினி காட்சிகளை நீக்கப்போவதாகவும், இது குறித்து கமல் கூட தன்னிடம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த நிமிடம் வரை ரஜினியை நக்கலடித்த காட்சி நீக்கப்படவில்லை.