Asianet News TamilAsianet News Tamil

வான வேடிக்கை நடுவே... காதலன் நெஞ்சில் சாய்ந்தபடி தீபாவளி வாழ்த்து கூறிய நயன்தாரா! வைரலாகும் வீடியோ..

கோலிவுட் திரையுலகின் ரொமான்டிக் காதல் ஜோடியான, நயன்தாரா (Nayanthara) - விக்னேஷ் சிவன் (Vignesh shivan) இருவரும் இந்த தீபாவளியை ஒன்றாக கொண்டாடியபடி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

kollywood love couples nayanthara and vignesh shivan diwali wishes video
Author
Chennai, First Published Nov 5, 2021, 1:27 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கோலிவுட் திரையுலகின் ரொமான்டிக் காதல் ஜோடியான, நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இந்த தீபாவளியை ஒன்றாக கொண்டாடியபடி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, அவ்வப்போது டேட்டிங் செய்வதையும், ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிக்கிள்ஸை வெறுப்பேற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது, தீபாவளி வாழ்த்துக்களை கூட திரைப்படத்தை மிஞ்சும் வகையில் செம்ம ரொமான்டிக்காக தெரிவித்துள்ளனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள். மேலும் இந்த வீடியோ மூலம் கடந்த சில வாரங்களாக நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் சிறிய மனக்கசப்பு உள்ளது என வெளியான தகவல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்: Annaatthe Box Office Collection 'அண்ணாத்த' படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்து வெளியான தகவல்..!

 

kollywood love couples nayanthara and vignesh shivan diwali wishes video

இந்த வருடம் காதல் ஜோடியாக தீபாவளியை சேர்ந்து கொண்டாடியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி அடுத்த வருடம், திருமணம் ஆகி தங்களது தலை தீபாவளியை கொண்டாடுவார்களா? என்பதே பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற போல் தங்களது காதல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வருகிறது இந்த ஜோடி. இதனை உறுதி செய்யும் விதமாக, விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா தனக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆன தகவலை உறுதி செய்தார்.

மேலும் செய்திகள்: Annaatthe: ரொம்ப ஓவர் முடியல... தலைவரின் படத்தை பார்த்து ஏமார்ந்த ரசிகர்களின் ஆதங்கம்..!

 

kollywood love couples nayanthara and vignesh shivan diwali wishes video

எனவே தொடர்ந்து இவர்களிடம் ரசிகர்கள் பலர் எப்போது உங்களது திருமணம் என்கிற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வரும் நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருமே தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார்கள். மேலும் அடுத்தடுத்த படங்களில் நயன்தாரா கமிட் ஆகி வருவதால் எப்படியும் இந்த வருடம் இவர்களுக்கு திருமணம் இல்லை, அடுத்த வருடம் தான் திருமணம் என்கிற தகவல்களும் உலா வருகிறது. காரணம் நயன்தாராவின் கை வசம் தற்போது 'பாகுபலி' வெப் சீரிஸ், ஒரு பாலிவுட் திரைப்படம் மற்றும் 3க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது.

மேலும் செய்திகள்: ரசிகர்களுடன் சேர்ந்து 'அண்ணாத்த' படத்தை குடும்பத்தோடு பார்த்த தனுஷ்! பிரபலங்கள் கொண்டாடும் தலைவர் தீபாவளி!

 

kollywood love couples nayanthara and vignesh shivan diwali wishes video

திரைப்படம் நடிப்பதில் மட்டும் இன்றி, காதலனுடன் சேர்ந்து 'ரவுடி பிச்சர்ஸ்' மூலம் படங்களை தயாரிப்பதிலும், விநியோகம் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் நயன். இவர்கள் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படமான 'கூழாங்கல்' தற்போது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்து வருகிறது. எனவே அடுத்தடுத்து சந்தோஷ தகவல்களால் திளைத்து கொண்டிருக்கும் இந்த காதல் ஜோடி, தீபாவளியை செம்ம குஷியாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

மேலும் செய்திகள்: Tamannaah Bhatia: தீபாவளி ஸ்பெஷல்லா... கோட்டை கழட்டி ரசிகர்களை சூடேற்றிய தமன்னா!! ஹாட் போட்டோஸ்..

வான வேடிக்கை பின்னால் தெரிய, நயன்தாரா விக்னேஷ் சிவன் நெஞ்சில் சாய்ந்தபடி செம்ம கியூட் லுக்கில் ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் தன்னுடைய பதிவில் கூறியுள்ளதாவது, உலகெங்கிலும் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

kollywood love couples nayanthara and vignesh shivan diwali wishes video

மகிழ்ச்சியாக இருப்பது ஒரு பயிற்சி! எனவே தயவுசெய்து தினமும் அதை பயிற்சி செய்யுங்கள் ஆம். கவலைகள் அனைத்தும் பட்டாசுகள் போல வெடிக்கப்பட வேண்டும், பின்னர் ஏற்படும் ஒளியை நாம் பார்க்க விருப்பப்பட வேண்டும்,  அதற்கானஒரே வழி... எதுவாக இருந்தாலும் நமது இலக்குகளை நோக்கி விடாமுயற்சியுடன் இருப்பதே...! மகிழ்ச்சியாக இருக்க மறக்காதீர்கள்! வாழ்க்கையில் கொண்டாடுவதற்கும் மகிழ்வதற்கும் நிறைய இருக்கிறது என்பதை இந்த பண்டிகைகள் நமக்கு ஒவ்வொரு முறையும் நமக்கு நினைவூட்டுகின்றன! வழக்கமான வேலைகளில் இருந்து சிறிது நேரம் ஒதுக்கி, வாழ்வில் உள்ள நல்ல விஷயங்களைப் பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள்! மிகவும் பாசிட்டிவாக தீபாவளியை கொண்டாடுங்கள் என கூறியுள்ளார். இவர்களுடைய வாழ்த்துக்கள் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios