Asianet News TamilAsianet News Tamil

ரசிகர்களுடன் சேர்ந்து 'அண்ணாத்த' படத்தை குடும்பத்தோடு பார்த்த தனுஷ்! பிரபலங்கள் கொண்டாடும் தலைவர் தீபாவளி!

நடிகர் தனுஷ் (Dhanush) தன்னுடைய மாமனார், ரஜினிகாந்தின் (Rajinikanth)  'அண்ணாத்த' (Annaatthe) படத்தை குடும்பத்தோடு, திரையரங்கில் பார்த்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன்(Sivakarthikeyan)  உள்ளிட்ட பிரபலங்கள் பலர் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து இந்த படத்தை பார்த்துள்ளனர்.

Actor dhanush sivakarthikeyan and more celebraties watch annaathe movie photos
Author
Chennai, First Published Nov 4, 2021, 8:49 AM IST

நடிகர் தனுஷ் தன்னுடைய மாமனார், ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தை குடும்பத்தோடு, திரையரங்கில் பார்த்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து இந்த படத்தை பார்த்துள்ளனர்.

கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த தலைமுறை ரசிகர்கள் இப்போது தான் தீபாவளி நாளில் ரஜினிகாந்தின் படத்தை பார்க்கும் அனுபவத்தை பெற உள்ளனர். படத்தின் பாடல்கள், டிரெய்லர் என ஒவ்வொன்றும் பக்காவாக இருப்பதால் படம் சூப்பர் ஹிட் என்று ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வந்த நிலையில்,  இன்று வெளியாகியுள்ள 'அண்ணாத்த' படத்தையும் இரவு முதலே கொண்டாட துவங்கி விட்டனர்.

மேலும் செய்திகள்: நடிகர் சூர்யா ஒரு சுயநலமி..! இவர் மட்டும் 5 மொழில படத்தை வெளியிடலாமா?? எச்.ராஜா டென்ஷன்..!

Actor dhanush sivakarthikeyan and more celebraties watch annaathe movie photos

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய குடும்பத்துடன்... 'அண்ணாத்த' படத்தை பார்த்து மிகவும் ரசித்ததாக hoote செயலி மூலம் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அப்போது தன்னுடைய மூத்த மருமகனான தனுஷ், மற்றும் பேரன்கள் இருவரும் அவருடைய தந்தையுடன் ஷூட்டிங்கில் கொடைக்கானலில் இருந்ததால் அவர்களால் இந்த படத்தை பார்க்க முடியவில்லை என்பதையும் கூறி இருந்தார். இந்நிலையில் தனுஷ், தன்னுடைய மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் ரசிகர்களுடன் 'அண்ணாத்த' படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: Annaatthe: களைகட்டும் 'தலைவர்' தீபாவளி! முதல் நாள் முதல் ஷோவ்வை மேளதாளத்தோடு வரவேற்ற ரசிகர்கள்..!

Actor dhanush sivakarthikeyan and more celebraties watch annaathe movie photos

மேலும், சிவகார்த்திகேயன், இயக்குனர் விக்னேஷ் சிவன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் சிவா, பிக்பாஸ் கவின், ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் திரையரங்கில் ரசிகர்களுடன் 'தலைவர்' தீபாவளியை கொண்டாடி உள்ளனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அதே போல் தலைவரின் ரசிகர்களுக்கு இன்றைய தினம் திரையரங்கில் தான் தீபாவளி என்பது போல், ஆட்டம் - பாட்டம், பட்டாசு வெடித்து 'அண்ணாத்த' படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்:Tamannaah Bhatia: தீபாவளி ஸ்பெஷல்லா... கோட்டை கழட்டி ரசிகர்களை சூடேற்றிய தமன்னா!! ஹாட் போட்டோஸ்..

Actor dhanush sivakarthikeyan and more celebraties watch annaathe movie photos

தமிழகம் மட்டும் இன்றி, வெளிநாடுகளிலும் அதிக அளவில் 'அண்ணாத்த' படத்தை வெளியிட்டுள்ளது சன் பிச்சர்ஸ் நிறுவனம். எனவே இந்த தீபாவளியை 'தலைவர்' தீபாவளியாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். நேற்று இரவு முதலே, ரசிகர்கள் 'அண்ணாத்த' படம் குறித்த, பல்வேறு ஹாஷ் டேக்குகளை உருவாக்கி சமூக வலைத்தளத்தை தெறிக்க விட்டு வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: Lijo Mol Jose: 'ஜெய்பீம்' தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை... படத்தில் நீங்கள் பார்த்தது நிஜ கண்ணீர்!

Actor dhanush sivakarthikeyan and more celebraties watch annaathe movie photos

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார். இதே போல் நீண்ட இடைவெளிக்கு பின், குஷ்பு மற்றும் மீனா இருவரும் இந்த படத்தின் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios