அஜித்துகள் இப்படி சைலண்டாக இருந்தால்.. அதர்வாக்கள் அந்த இடத்தை பிடிப்பார்கள்! என்பதுதானே சினிமா எதார்த்தம்...

ஆக்சுவலா, ‘துருவங்கள் பதினாறு’ எனும் படம் உருவாகிக் கொண்டிருந்த போது யாரும் பெர்சா கண்டுக்கல. காரணம், அதன் இயக்குநர் கார்த்திக் நரேன் ஒரு சின்னப்பையன், அதன் ஹீரோவோ ஃபீல்டு அவுட்டான நடிகர் ரகுமான். ஆனால், அப்படம் வெளியான பின் செமத்தியான ரிவியூவை வாங்கியது. கலெக்‌ஷன் அள்ளாவிட்டாலும் கூட, ‘கவன ஈர்ப்பில்’ பின்னி எடுத்தது அப்படம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன் பின் கோலிவுட்டின் கவனிக்கத் தக்க இயக்குநாரானார் நரேன். அருண் விஜய்யை வைத்து மாஃபியா பண்ணினார். பெரிசா ஹிட் இல்லை. மல்ட்டி ஸ்டாரர் மூவியாக ‘நரகாசுரன்’ செய்தார். ஆனால் தயாரிப்பாளர் கவுதமுடனான பிரச்னையால் இப்போது வரை ரிலீஸ் ஆகலை. அதன் பின் மணிரத்னம் தயாரிப்பில் ‘நவரசா’ ஆந்தாலஜியில் ஒரு பார்ட் பண்ணினார். ம்ஹும் அதுவும் பெர்சா எடுபடல! அதன் எந்த இயக்குநரின் படைப்பும் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இயக்குநர் கார்த்திக் நரேன்

இப்போது தனுஷை வைத்து மாறன் பண்ணியிருக்கிறார். கார்த்திக்கின் கதை, கதைக்களம் எப்படியோ. ஆனால் மேக்கிங்கில் மிரட்டுகிறார். அடுத்து அஜித்துக்காக ஒரு கதையை முடிவு செய்து வைத்திருந்தார். வலிமை!க்கு பின் சுதா கொங்கரா தான் அஜித்தின் இயக்குநர் என்று பேசப்பட்ட நிலையில் இப்போது அது ஊத்தி மூடப்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான் அஜித்திற்கு அந்த ஒன்லைன் கதையை வாய்ஸ் நோட்டில் சொல்லி அனுப்பினாராம் நரேன். ஏ.கே.வும் கேட்டுவிட்டு ‘குட்’ என்றார். ஆனால் அதன் பின் அஜித் தரப்பில் இருந்து எந்த ரிப்ளையும் இல்லையாம்.

இச்சூழலில் திடுதிப்பென நரேன் தன் அடுத்த படத்தை அறிவித்துவிட்டார். அதர்வாவை ஹீரோவாக்கி, சரத் மற்றும் ரகுமான் முக்கிய ரோல்களில் நடிக்க ‘நிறங்கள் மூன்று’ என்று டைட்டிலே வெளியிட்டாச்சு.

இப்ப கோலிவுட்டின் கேள்வி ‘அஜித்துக்கு பிளான் பண்ணிட்டு நீ எப்படிப்பா அதர்வாவை டிக் அடிச்ச?’ என்பதே.

அஜித்துகள் இப்படி சைலண்டாக இருந்தால்.. அதர்வாக்கள் அந்த இடத்தை பிடிப்பார்கள்! என்பதுதானே சினிமா எதார்த்தம்.

ஆல் தி பெஸ்ட் அதர்வா & கார்த்திக்!