தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை  அவரது தோழி சசிகலா ஏற்றுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர்ரான  சசிகலாவுக்கு அரசியல் தலைவர்களும், கோலிவுட் திரையுலகினர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த நடிகர் திலகம்   சிவாஜிகணேசன்  குடும்பத்தினர் நடிகர் பிரபு மற்றும் அவரின் சகோதரர் ராம்குமார் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் சென்று மரியாதை நிமித்தமாக சசிகலாவை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும்  திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர்  ஜாகுவார் தங்கம், நடிகர் விஜயகுமார் ஆகியோர்களும் சசிகலாவை சந்தித்துள்ளனர். 

அதுமட்டுமின்றி மேலும் பல  கோலிவுட் பிரபலங்கள் சசிகலாவை மரியாதை நிமித்தம் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.