கொரோனா பிரச்சனை உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 45 நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்த நாள் முதலே கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன. டாஸ்மாக் திறப்பை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதிமுகவின் கூட்டணி கட்சிகளான தேமுதிக, பாமக ஆகியவையும் டாஸ்மாக் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க:  “வன்னியர் வளர்ந்தா வயிறு எரியுதாடா?”.... தன்னை விமர்சித்த நெட்டிசனை தாறுமாறாக கிழித்த திரெளபதி இயக்குநர்....!

ஊரடங்கால் ஒருவேளை உணவிற்கு கூட  ஏழை எளிய மக்கள் வாடி வரும் இந்த நேரத்தில் டாஸ்மாக் கடையை திறந்திருப்பது குடும்ப தலைவிகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏதோ பல நாள் பட்டினி கிடந்தவன் விருந்திற்கு காத்திருப்பதை போன்று டாஸ்மாக் முன்பு ஆயிரக்கணக்கான குடிமகன்கள் வரிசையில் காத்திருந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

கொரோனா நேரத்தில் டாஸ்மாக்கை திறந்த தமிழக அரசை கண்டிக்கும் விதமாக #குடிகெடுக்கும்_எடப்பாடி என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி நடிகரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த கொரோனா ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழர்களின் #குடிகெடுக்கும்_எடப்பாடி அரசை வன்மையாகக்  கண்டிக்கின்றோம் என்று பதிவிட்டுள்ளார். 

இதற்கு முன்னதாக டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பெண்களுக்கு கோரிக்கை விடுத்திருந்த திரெளபதி இயக்குநர் மோகன் ஜி-யும் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். குடிமகன்கள் சரக்கு வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள அவர், பாவம்.. பசியால் வாடும் ஏழைகள்..  ரேசன் கடைக்கு கூட இவ்வளவு ஏற்பாடு இருக்காது... என்று கருத்து தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் செல்ல பேரனுக்கு இன்று பிறந்தநாள்... வைரலாகும் கேக் கட்டிங் போட்டோ...!

சமீபகாலமாக ட்விட்டரில் படு ஆக்டிவாக இருந்து வரும் யோகிபாபு, கவுண்டமணி, செந்தில் காமெடி வீடியோ ஒன்றை பகிர்ந்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக குடை பிடித்துக்கொண்டு வர வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதை சூசகமாக விமர்சித்துள்ளார்.