புதுசு கண்ணா புதுசு.. இதுதாங்க என்னோட அடுத்த மூவ் - ஓப்பனாக சொன்ன நடிகை பாவனி ரெட்டி - என்னவா இருக்கும்?

முதலில் திரைப்படங்களில் நடிக்க துவங்கி, அதன் பிறகு சின்னத்திரை நாடகங்கள் மூலம் பிரபலமான நடிகர், நடிகைகள் பலர் உண்டு. அந்த வகையில் நடிகை பாவனி ரெட்டி அவர்களும் ஒரு மிகச்சிறந்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

Kollywood actress Pavani Reddy gave a clue to audiences about her next project ans

கடந்த 2012 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான லாகின் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஒரு நடிகை தான் பாவனி ரெட்டி. அதன் பிறகு தொடர்ச்சியாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வஜ்ரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 

அதன் பிறகு இன்றளவும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார், இறுதியாக தல அஜித் அவர்களுடைய "துணிவு" திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு பிரதீப் குமார் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்த நிலையில், அந்த ஆண்டு பிரதீப் குமார் மரணம் அடைந்தது, பவானியை பெரும் துயரத்திற்கு உள்ளாகியது. 

விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் 5 வருட பயணம் முடிவுக்கு வந்தது! உறுதி செய்த புகைப்படம்!

அதன் பிறகு கடந்த 2022ம் ஆண்டு அமீர் என்பவரோடு இவருக்கு திருமணம் நடந்து முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. பாவனி ரெட்டி அவர்கள் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பல சீரியல்களில் நடித்து வரும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று, இரண்டாம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் தற்பொழுது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் ஒரு புதிய சீரியல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். ஒரு சாதாரண புடவையில் கழுத்தில் ஒரு கயிறோடு அவர் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, தான் நடிக்கவிருக்கும் புது சீரியல் குறித்த தகவலை வெளியிட்டு இருக்கிறார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pavni (@pavani9_reddy)

அவர் என்ன சீரியலில் நடிக்க போகிறார் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக தமிழில், விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஒளிபரப்பான சின்ன தம்பி நாடகத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ்ஸிடம் இருந்து விஜய் டிவி பிரபலத்திற்கு சென்ற கிஃப்ட்! இவர் தான் வைல்ட் கார்டா? வைரலாகும் வீடியோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios