kolangal serial actor abishek miss the kathalkottai movie

நடிகர் அஜித் மற்றும் நடிகை தேவயாணி வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது 1996 ஆம் ஆண்டு வெளியாகி, காதலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை தழுவிய 'காதல் கோட்டை' திரைப்படம் எனலாம்.

தற்போது அஜித் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி சாதனைகள் படைத்தாலும், இன்று முதல் 'காதல் கோட்டை' படத்தின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. 

இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்கும் வாய்ப்பு, நடிகர் அபிஷேக்கை தான் தேடி வந்ததாம். இவர் வேறு யாரும் இல்லைங்க...! நடிகை தேவயாணி நடித்த 'கோலங்கள்' சீரியலில் அவருக்கு கணவராக நடித்திருப்பாரே அவர் தான்.

இவர் இந்த படத்தில் நடிக்க துவங்கிய ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நின்று போய் விட்டதாம். பின் இவரை மீண்டும் நடிக்க கூறி அழைத்ததற்கு ஒரு சில காரணங்களால் நடிக்க மறுத்து விட்டாராம்.

பின் இந்த படத்தில் கதாநாயகனாக அஜித்தை நடிக்க வைத்து எடுத்தார்களாம். இந்த படம் வெளியாகி மிகபெரிய வெற்றி பெற்ற போது, இந்த படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவற விட்டு விட்டோமே... என எண்ணி, அபிஷேக் நடு ரோட்டில் கூட அமர்ந்து அழுதுள்ளாராம். இந்த தகவலை அவரே கூறியுள்ளார்.

ஒருவேளை இந்த படத்தில் அபிஷேக் நடித்திருந்தால், முன்னணி நடிகர்களில் ஒருவராக இவரும் இருந்திருப்பாரோ... என்னவோ...? ஆனால் இந்த ஒரு படத்தின் இழப்பு தற்போது இவருடைய திரையுலகையே மாற்றி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.