முக்கியத்துவம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது அதிகமாக ஹீரோக்களுடன் டூயட் பாடாமல் சோலாவாக தனக்கு  முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அறம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. நயன்தாராவுக்கு சிறந்த நடிகை என்ற பெயரையும் வாங்கித் தந்தது.

கோலமாவு கோகிலா

இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.லைக்கா புரோக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மற்ற நடிகர்கள்

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு,ஜாக்குலின் நிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.

வைரல்

இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சிங்கிள் டீசர் வெளியாகியுள்ளது.இதுமட்டுமல்லாமல் அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தின் விளம்பர இடைவேளை என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது