kochadaiyan proucer arrest

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 2014, ஆண்டு வெளிவந்த கோலிவுட்டின் முதல் மோஷன் பிக்சர் படமான கோச்சடையான், தோல்வியடைந்து பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

இந்த படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டைன்மெண்ட், முரளி மனோகர் தயாரித்திருந்தார். இந்த படத்தின் அனிமேஷன் காட்சி பணிகள், சீனா, அமெரிக்க போன்ற பல வெளிநாடுகளில் நடைபெற்றதால் எதிர்பாத்த செலவை விட பலமடங்கு அதிகமாக செலவு செய்து படத்தை தயாரித்தார் முரளி மனோகர்.

இதனால் படத்தின் செலவிற்காக , அமீர்சந்த் நகர் என்பவரிடம் ஐந்து கோடி ரூபாய் கடன் பெற்று படத்தை எடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்திற்காக பெற்ற கடனை திரும்பி கொடுக்குமாறு, அமீர்சந்த் நகர் பல நாட்களாக வலியுறுத்தியதால், இவரிடம் பெற்ற தொகைக்கு தயாரிப்பாளர் முரளி மனோகர் செக் போட்டு கொடுத்து அது பௌனஸ் ஆனது .

இதனால் பல முறை, அவரை சந்திக்க அமீர்சந்த் முயற்சித்தும் முடியாமல் போனதால், இது குறித்து வழக்கு தொடர்ந்தார் . இந்த வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில். 


வழக்கில் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது , இதில் செக் கொடுத்து ஏமாற்றியதற்காகவும் பணம் தராமல் அமீர் சந்தை மனஉளைச்சலுக்கு ஆளாகியதற்காகவும் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்க பட்டது .

அதே போல் இந்த பணம் பெறுவதற்காக ஜாமீன் கையெழுத்து போட்ட லதா ரஜினிகாந்திற்கும் சிக்கல் வரலாம் என கூறப்படுகிறது.