ராகுவில் செய்யும் நிகழ்வுகளுக்கு கேதுவில் பதில் சொல்ல வேண்டும் என்பது ஜோதிட விதி. அந்த விதியின்படியே பிரபல பிரமுகர் கிஷோர்.கே.சாமி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் ஒரே ஜாதகம் என்பதால் அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் முகநூல்வாசி ஒருவர் கணித்துள்ளார்.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தொடர்ந்து அவதூறான பதிவுகள் எழுதிவருவதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் இன்று சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட கிஷோர்.கே.சாமி அடுத்த மூன்று மணிநேரங்களில் ஜாமினில் வெளியே வந்தார். பல்வேறு சர்ச்சைகளால் ஏற்கனவே பிரபலமடைந்துள்ள கிஷோர்.கே.சாமி இன்றைய கைதால் இன்னும் கொஞ்சம் பிரபலாகியுள்ள நிலையில் தனது முகநூல் பக்கத்தில் அவருடைய ஜாதகத்தையே கணித்துப்போடும் அளவுக்கு போயுள்ளார் ஒருவர்.

அக்கணிப்பில்,...கிஷோர் கே சாமி தனுசு ராசி. நவம்பர் 14 ஜென்ம குரு வரும் முன்பே சற்று சோதனைகள் . சுக்கிரன் சந்திரன் இணைவு உத்திராடத்தில். சுக்கிரன் உத்திராடம் எனும் சூரியன் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார்.

சூரியன் சதயம் எனும் ராகுவின் நட்சத்திரத்தில் உள்ளார். ராகு தற்பொழுது ஆருத்திரா திருவாதிரை எனும் தொலை தொடர்பை சமூக வலைத்தளங்களை குறிக்கும் இடத்தில் கோச்சாரத்தில் உள்ளார். ராகுவில் செய்யும் நிகழ்வுகளுக்கு கேதுவில் பதில் சொல்ல வேண்டும் என்பது ஜோதிட விதி.

எனவே சதியத்தில் உள்ள சூரியனை செயல்பட வைத்தால் அது சார்ந்த நட்சத்திரங்களை இயக்கும்.. அந்த நட்சத்திரம் உத்திராடம் அதில் உள்ள கிரகம் சுக்கிரன்.

பெண்கள், மீடியா = சுக்கிரன். தற்பொழுது நடப்பது ராகு திசை சுக்கிர புத்தி. இது முடிந்ததும் ராகு திசை சூரிய புத்தி. சூரியன் அரசாங்கம். தற்பொழுது குரு மகரத்திற்கு பெயர்ச்சியாக 1 ஆண்டு செல்ல வேண்டும். பிறகு நல்ல நேரம் ஆரம்பம் ஆகி விடும்.. இந்த சோதனையான கால கட்டங்களில் இறை வழிபாடு 100% பயன் தரும் - என்று  பவானி ஆனந்த் என்பவர் கூறியுள்ளார்.

இப்பதிவுக்குக் கீழே உள்ள  சில கமெண்டுகளுக்கு பதிலளித்திருக்கும் அவர், கிஷோருக்கும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் ஒரே ஜாதகம் என்றும்  பதிவிட்டிருக்கிறார்.