கொரோனா லாக்டவுன் காரணமாக திரையுலகம் முற்றிலும் முடங்கியுள்ளது. சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்படாததோடு, தியேட்டர்களை திறக்கவும் தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் புதிய படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்களும், பூட்டி வைக்கப்பட்டுள்ள தியேட்டரால் அதன் உரிமையாளர்களும் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். 

கடந்த 150 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தியேட்டர்களில் எலித்தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இருக்கைகளை கடித்து துவம்சம் செய்யும்  எலிகளால் மல்டி பிளாக்ஸ், மால்களில் உள்ள தியேட்டர்கள் கூட சின்னாபின்னமாகி வருகின்றன. இந்நிலையில் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் சார்பில் முதலைமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கணவரை கட்டி அணைத்த படி குஷ்பு... குறையாத அழகுடன் ஜொலிக்கும் கோலிவுட் தம்பதியின் வைரல் போட்டோ...!

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச்செயலாளர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 1,020 தியேட்டர்கள் உள்ளன. அந்த தியேட்டர்களில் 25 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்தார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தியேட்டர் ஊழியர்கள், தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 10 லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை காப்பாற்ற வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம். 

 

இதையும் படிங்க: “காக்க காக்க” படத்தில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லையாம்... ஜோதிகா சிபாரிசு செஞ்ச ஹீரோக்கள் யார் தெரியுமா?

திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருபவர்கள்தான் எங்கள் முதலாளிகள். அவர்களை காப்பாற்றும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. அதற்கு மத்திய-மாநில அரசுகள் கூறும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த தயாராக இருக்கிறோம். அதனால் மத்திய-மாநில அரசுகள் நல்ல முடிவெடுத்து படப்பிடிப்புகளை தொடங்குவதற்கும், திரையரங்குகளை திறப்பதற்கும் உடனடியாக உத்தரவிட வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளார்.