அட்ராசக்க.... உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான குஷ்புவுக்கு தேடி வந்த ஹீரோயின் சான்ஸ் - யாருக்கு ஜோடி தெரியுமா?
ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்த பின் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறிய நடிகை குஷ்புவுக்கு (Khushbu) தற்போது ஹீரோயின் சான்ஸ் கிடைத்துள்ளது.
'மூடு பனி' என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மோகன் (Mohan). இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, 'நெஞ்சத்தை கிள்ளாதே' திரைப்படம் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதை தொடர்ந்து வெளியான கிளிசல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் செய்வதில்லை போன்ற படங்கள், ஒரு வருடத்திற்கு மிகாமல் ஓடி, தமிழ் சினிமாவில் இவரை நிலைக்க செய்தது.
மிக குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தது மட்டும் இன்றி இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சினிமாவை விட்டு விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் மோகன் (Mohan).
10 ஆண்டுகளாக திரையுலகை விட்டு விலகி இருந்த மோகன் கடந்த 2008 ஆம் ஆண்டு, வெளியான 'சுட்டப்பழம்' என்கிற படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து இவர் நடிப்பில், கன்னடம் தெலுங்கு, ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படமும் பெரிதாக வெற்றிபெறவில்லை.
தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் மோகன். அவர் நடிக்க உள்ள புதிய படத்துக்கு ‘ஹரா’ (Haraa) என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை, தாதா 87, பவுடர், பப்ஜி போன்ற படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் மோகனுக்கு ஜோடியாக நடிக குஷ்பு நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் ஏற்கனவே கடந்த 1988-ம் ஆண்டு வெளியான ஆத்ம கதா என்கிற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்திருந்தாலும், தமிழில் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. நடிகை குஷ்பு (Khushbu) அண்மையில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறிய நிலையில், அவருக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.