ஒட்டு மொத்த இந்தியாவையும் கன்னட திரையுலகை நோக்கி திரும்பி பார்க்க வைத்த படம் கே.ஜி.எஃப். குறுகிய வட்டத்தில் சுழன்று கொண்டிருந்த கன்னட சினிமாவை அந்த வட்டத்தை தாண்டி 5 மொழிகளில் தூள் கிளப்ப வைத்த திரைப்படம். பிரபல கன்னட நடிகர் யஷ், ஸ்ரீனிதி ரெட்டி, ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க உள்ளார். பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் அதீரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக தற்போதைய படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  ராக்கி பாயை மீண்டும் காண வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறனர். கே.ஜி.எப். 2 பற்றி ஏதாவது அப்டேட் கிடைக்காதா என காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ராக்கி பாய் சூப்பரான விஷயம் ஒன்றை செய்து அசத்தியிருக்கிறார். 

இதையும் படிங்க: கண்ணீர் விட்டு கதறிய நயன்தாரா... இயக்குநர் காலில் விழுந்து அழுத வைரல் வீடியோ...!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ், 2016ம் ஆண்டு ராதிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. அய்ராவிற்கு ஒரு வயது பூர்த்தியாகும் முன்பே, ராதிகா இரண்டாவது முறையாக கர்ப்பமானார். அந்த காதல் தம்பதிக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியான தருணத்தில் தனது மகனின் பூஞ்சு கரங்கள், தன் விரலை பற்றி இருப்பது போன்ற புகைப்படத்தை யஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட தாறுமாறு வைரலானது. 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

இந்நிலையில் யஷிடம் குட்டி ராக்கி பாய் போட்டோவை காட்டும் படி ரசிகர்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது அந்த கோரிக்கையை ஏற்று யஷ் தனது செல்ல மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன் என் செல்ல மகனுக்கு ஹலோ சொல்லுங்கள், உங்கள் அன்பையும், ஆசியையும் அவனுக்கு தாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஜூனியர் ராக்கி பாயின் க்யூட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.