விஜய், அஜித், உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னாவுக்கு உயர்நீதி மன்றம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல இளைஞர்களை, ஆன்லைன் ரம்மி மூலம் பண ஆசை காட்டி, தற்கொலை செய்துக்கும் அளவிற்கு அழைத்து செல்லும், ரம்மி விளையாட்டு எதிராக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை தற்போது கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் கூட கோவையைச் சேர்ந்த ஒருவர், ரம்மி விளையாட்டில் லட்ச கணக்கில் பணத்தை இழந்து, அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக,  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

எனவே இந்த விளையாட்டை தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் தடை விதித்திருந்தாலும் இன்னும் பல மாநிலங்களில் இந்த ஆன்லைன் விளையாட்டு அமோகமாக விளையாடப்பட்டு வருகிறது. இதனால் லட்ச கணக்கில் பணத்தை அவர்கள் இழக்கும் நிலையம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் இந்த ஊக்குவிக்கும் வகையில், இதுபோன்ற விளையாட்டு விளம்பரங்களில் தோன்றும், பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலி வடக்கன் என்பவர் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரணை செய்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இதுகுறித்து கேரள அரசு உடன் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது அதுமட்டுமின்றி இந்த விளையாட்டின் விளம்பர மால்களான நடிகை தமன்னா, மலையாள நடிகர் அஜூ வர்கீஸ், கிரிக்கெட் வீரர் விராத் கோலி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. 

ஆன்லைட் சூதாட்ட வழுக்கு தொடர்பாக, முன்னணி நடிகை தமன்னாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.