சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கையை பகிர்ந்து கொள்ள சொல்கிறார்கள் என்ற பகீர் குற்றச்சாட்டு ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை வெடித்தது. இதையடுத்து கடந்த சில வருடங்களாகவே Me Too மூலம் பெண்கள் பலர் தாங்கள் சந்தித்த பாலியல் கொடுமைகளை சோசியல் மீடியாவில் தைரியமாக சொல்ல ஆரம்பித்தனர். இதில் சினிமா நடிகைகள் அதிகம் புகார் அளித்து வந்தனர்.

தமிழில் கண்ணுக்குள்ளே, ராமர், திலகர், ஒரு நாள் இரவில், சூரன் ஆகிய படங்களில் நடித்தவர் அனுமோள். மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  இந்நிலையில் அனுமோள் தனக்கு சிலர் சமூக வலைதளம் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக இன்ஸ்டாகிராமில் புகார் அளித்துள்ளார்.

இதில் சிலர் தங்களுடைய அந்தரங்க புகைப்படங்களை எனக்கு அனுப்பி வருகிறார்கள். அவர்களை பிளாக் செய்து நான் மிகவும் சோர்வாகிவிட்டேன். ஒருவர் ஆபாச வீடியோக்களை தொடர்ந்து வெவ்வேறு கணக்குகளிலிருந்து எனக்கு அனுப்பி வருகிறார். இப்படி தொல்லை செய்வதை நிறுத்துங்கள். இனி சைபர் கிரைம் போலிஸ் மூலமான நடவடிக்கை எடுப்பேன், இது போல ஆபாச படங்களை அனுப்பினார் பெண்களுக்கு அறுவெறுப்பு தான் ஏற்படும் வேறு எந்த உணர்வுகளும் ஏற்படாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.