RC 15 Update : RC 15 படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதில் ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், 2-வது ஹீரோயின் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படம் RC 15. ஆர்.ஆர்.ஆர் பட நாயகன் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை பிரபல தயரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதுவரை ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் மட்டுமே பணியாற்றி வந்த ஷங்கர், முதன்முறையாக தமன் உடன் இணைந்துள்ளார்.

RC 15 படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதில் ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், 2-வது ஹீரோயின் யார் என்பதை வெளியிடாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தனர். இந்நிலையில், அந்த ஹீரோயின் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தான் 2-வது ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. அதேபோல் அவர் ராம்சரணுக்கு ஜோடியாக நடிப்பதும் இதுவே முதன்முறை.

அரசியல் கதையம்சத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகை அஞ்சலியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் ஷூட்டிங்கில் கீர்த்தி சுரேஷ் இணைவார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 25 நாட்களில் RRR பட பாக்ஸ் ஆபிஸ் சாதனையை அடித்து நொறுக்கிய KGF 2... கலெக்‌ஷனில் கெத்து காட்டும் ராக்கி பாய்