இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில், கடந்த 1972 ஆம் ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் - ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரில்லர் திரைப்படம் 'சிவப்பு ரோஜாக்கள்'. ஆண்களை மயக்கி தன் ஆசை வளையில் சிக்க வைக்கும் பெண்களை தேடிப் பிடித்து கொலை செய்யும் சைக்கோவின் கதை.இந்த படம் தற்போது 42 வருடங்களுக்கு பிறகு தற்போது அந்த படம் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியாகின.

 

இதையும் படிங்க: காரில் இருந்து இறங்கி அழுது கொண்டே ஓடிய எமி ஜாக்சன்... காரணம் என்ன தெரியுமா?

பாரதிராஜா இயக்கிய இந்த படம், 100 நாட்களை கடந்து ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் கமல்ஹாசனால் இது போன்ற திரில்லர் படங்களிலும் நடிக்க முடியும் என இந்த படம் நிரூபித்தது. இந்நிலையில் இந்த படத்தை தற்போது ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார், பாரதிராஜாவின் மகன் மனோஜ்.இயக்குனராக மனோஜ் அறிமுகமாக உள்ள இந்த படத்தில், நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி  நடிகை ஸ்ரீதேவி நடித்த ஹீரோயின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க வாய்ப்புள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியது. 

 

 

இதையும் படிங்க: விஜய் மனைவியை வரம்பு மீறி அசிங்கப்படுத்திய மீரா மிதுன்... ஒத்த ட்வீட்டில் தெறிக்க விட்ட சகோதரர்...!

இதுகுறித்து பாரதிராஜாவின் மகனான மனோஜ் கூறியுள்ளதாவது, சிவப்பு ரோஜக்கள் 2 படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அந்த படத்தில் நடிப்பது தொடர்பாக எந்த நடிகையிடமும் இன்னும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நானோ, எனது தந்தையோ வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் சிவப்பு ரோஜாக்கள் 2 படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.